Enable Javscript for better performance
தேவாலயம் மீது தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    

    உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் கன்டோண்மென்ட் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது மர்ம நபர்கள் வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர்.

    இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:

    ஆக்ரா, பிரதபுரா பகுதியில் புனித மேரி தேவாலயத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர்.

    இது தொடர்பாக, ரகப்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து, தேவாலயத்துக்கு வந்த மாவட்ட நிர்வாகத்தினரும், காவல்துறை அதிகாரிகளும் அங்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    இதனிடையே, சம்பவம் குறித்து உள்ளூரில் வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் கண்டனம் தெரிவித்தனர். 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

    மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில், கடந்த மாதம் 14ஆம் தேதி கன்னியாஸ்திரி ஒருவரை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், அங்கிருந்த பணத்தொகையையும் அவர்கள் களவாடிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, 2 வங்கதேசத்தவர் கைது செய்யப்பட்டனர்.

    அதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, அங்குள்ள தேவாலயத்தையும், பள்ளியையும் மர்ம நபர்கள் சூறையாடினர். அந்த சம்பவம் தொடர்பாக ஹிந்து அமைப்புகளின் தொண்டர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு, பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai