Enable Javscript for better performance
நக்ஸல்களால் கடத்தப்பட்ட 11 பேரில் ஐவர் விடுவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒடிஸா மாநிலம், மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ள கர்தன்பள்ளி என்ற கிராமத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்ட 11 பேரில், ஐவரை மாவோயிஸ்டுகள் வியாழக்கிழமை விடுவித்தனர்.

    இத்தகவலை மாநில டிஜிபி சஞ்சீவ் மாரிக் புவனேசுவரத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

    கர்தன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த, மதிலி வட்டார முன்னாள் தலைவர் திரிநாத் பூமியா, பொன்டுகு கோலார் ஆகிய இருவரை புதன்கிழமை இரவிலும், மற்ற மூவரை வியாழக்கிழமை காலையிலும் மாவோயிஸ்டுகள் விடுவித்தனர்.

    கடத்திச் செல்லப்பட்டு மாவோயிஸ்டுகளின் பிடியில் இருக்கும் எஞ்சிய 6 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடத்தப்பட்ட நபர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் இயக்க அனுதாபிகள். மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை காவல் துறையினர் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர் என்றார் டிஜிபி மாரிக்.

    கடத்தப்பட்டோரில் ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை மல்கான்கிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மித்ரபானு மொஹபத்ராவும் உறுதி செய்துள்ளார். எனினும், விடுவிக்கப்பட்டவர்கள் தங்களது இல்லங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai