Enable Javscript for better performance
நேபாள முன்னாள் பிரதமர் மறைவு- Dinamani

சுடச்சுட

    
    thapa

    நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்ய பகதூர் தாபா (87), தில்லி அருகே குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார்.

    அந்த மருத்துவமனையில் கடந்த 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்ததில், அவருக்கு குடல் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தாபாவுக்கு கடந்த 10ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை இரவு 10:44 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, அவரது உடலை வியாழக்கிழமை காலையில், உறவினர்கள் தங்கள் சொந்த ஊருக்குக் கொண்டு சென்றனர்.

    மோடி இரங்கல்: சூர்ய பகதூர் தாபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சூர்ய பகதூர் தாபாவின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெறும். 1990ஆம் ஆண்டுக்கு முன்பு, 3 முறை பிரதமர் பதவி வகித்த சூர்ய பகதூர் தாபா, அதன் பிறகு ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சி என்ற பெயரில் புதுக் கட்சியைத் தொடங்கினார்.

    இதையடுத்து, மீண்டும் இரு முறை பிரதமராகப் பதவி வகித்த அவர், 2005ஆம் ஆண்டு தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai