Enable Javscript for better performance
பருவம் தவறிய மழையால் பயிர் இழப்பு: அதிர்ச்சியில் உ.பி. விவசாயிகள் 5 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பருவம் தவறிய மழையால் பயிர் இழப்பு: அதிர்ச்சியில் உ.பி. விவசாயிகள் 5 பேர் சாவு

    By dn  |   Published on : 17th April 2015 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக பயிர்கள் சேதமடைந்தன. இதனால், பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயிகள் 5 பேர் அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.

    மாநிலத்தில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இந்த விவசாயிகள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

    மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தில் அதிர்ச்சி அடைந்த சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவரும், 68 வயதுடைய விவசாயி ஒருவரும் புதன்கிழமை உயிரிழந்தனர்.

    இதேபோல், சந்த் கபீர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க விவசாயியும், பாராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த வித்யா சாகர் (50) என்ற விவசாயியும் பயிர்கள் சேதமடைந்ததால் உண்டான அதிர்ச்சியில் உயிரிழந்தனர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுநாத் (62) என்ற விவசாயி புதன்கிழமை உயிரிழந்ததாகவும், ஆனால் அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அந்த மாவட்ட கூடுதல் ஆட்சியர் ராகேஷ் குமார் சிங் தெரிவித்தார்.

    இதுகுறித்து விவசாயிகள் உயிரிழந்த மற்ற மாவட்டங்களின் கூடுதல் ஆட்சியர்கள் கூறியதாவது:

    இயற்கைப் பேரழிவினால் உண்டான பயிர்ச் சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 50 சதவீத பயிர்கள் மழையால் சேதமடைந்தது தெரியவந்துள்ளது.

    உயிரிழந்த விவசாயிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உரிய விசாரணைக்குப் பின்னர் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

     

    விவசாயி தற்கொலை: இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகதீஷ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிவபரண் சிங் (35) என்ற விவசாயி பயிர்ச் சேதத்தால் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிவபரணின் மனைவி சுனிதா கூறுகையில், "மழையின் காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதத்ததுக்கு குறைந்த அளவு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1,782 மதிப்பிலானகாசோலை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இதனால் அவர் இன்னும் மனதளவில் பாதிக்கப்பட்டார்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai