Enable Javscript for better performance
பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை சகித்துக்கொள்ள முடியாது: முஃப்தி- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை சகித்துக்கொள்ள முடியாது: முஃப்தி

    By dn  |   Published on : 17th April 2015 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mufti

    "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்படுவதையும், அந்நாட்டுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்படுவதையும் சகித்துக் கொள்ள முடியாது' என்று மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீது தெரிவித்தார்.

    பிரிவினைவாதத் தலைவர் சையது அலி கிலானி தலைமையிலான ஹுரியத் மாநாடு அமைப்பினர், ஸ்ரீநகரில் புதன்கிழமை பேரணி நடத்தினர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தொடங்கி, கிலானி வீடு வரை நடைபெற்ற அந்தப் பேரணிக்கு, பயங்கரவாத வழக்குகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டு, அண்மையில் விடுதலையான மஸரத் ஆலம் தலைமை தாங்கினார்.

    பேரணியில் கலந்து கொண்டவர்கள், பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். அந்நாட்டுக்கு ஆதரவாக அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். மேலும் ஹதர்போரா என்ற இடத்தில் பாகிஸ்தான் கொடியும் ஏற்றப்பட்டது. இந்தப் பேரணிக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு எப்படி அனுமதி அளித்தது? என்ற சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில் மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீது வியாழக்கிழமை கூறியதாவது:

    பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது என்பது என்னைப் பொருத்தவரையில் சரியானதுதான். பல்வேறு கொள்கைகளுக்கு இடையிலான போட்டியில்தான் ஜனநாயகம் அடங்கியுள்ளது.

    அவர்கள் (பிரிவினைவாதிகள்) தங்களுக்கென தனி வழியைக் கடைப்பிடிக்கவும், சொந்தக் கருத்துக்களைப் பேசவும் உரிமை உள்ளது. ஆனால், பாகிஸ்தான் கொடி ஏற்றப்படுவதையும், அந்நாட்டுக்கு ஆதரவாக கோஷமிடுவதையும் சகித்துக் கொள்ள முடியாது. பேரணியில் இடம்பெற்ற நிகழ்வுகளை, அதிகாரிகள் விடியோப் பதிவு செய்திருப்பர். அதன் அடிப்படையில், சட்டம் தன் கடமையைச் செய்யும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முஃப்தி.

    வழக்குப்பதிவு: இதனிடையே, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கிலானி, மஸரத் ஆலம் உள்ளிட்டோர் மீது ஜம்மு-காஷ்மீர் மாநில காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

     

    பிடிபி கருத்தால் சர்ச்சை

     

    பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகள் சரியானவையே என்று அங்கீகரிக்கும் வகையில், ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞரணித் தலைவர் ரஹுமான் பாரா கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர் கூறியதாவது:

    பிரிவினைவாதம்,பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளை காஷ்மீரில் எழுப்புவது யதார்த்தமான ஒன்றுதான். அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கான ஜனநாயக உரிமையை மறுக்க இயலாது.

    பாகிஸ்தான் கொடிகளை ஏந்திச் சென்றது இளைஞர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. இதுதான் மாநில மக்களின் எண்ணமும்கூட. எனவே இதில் தவறேதும் இருக்க முடியாது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai