Enable Javscript for better performance
பிரணாப் இன்று சத்தீஸ்கர் பயணம்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் பயணமாக சத்தீஸ்கர், பிகார் மாநிலங்களுக்குச் செல்கிறார்.

    இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள 4-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார்.

    பின்னர், சனிக்கிழமை பிகார் மாநிலத்தில் பாட்னா உயர் நீதிமன்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai