Enable Javscript for better performance
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட 11 பேரும் விடுவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒடிஸா மாநிலம், மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ள கர்தன்பள்ளி என்ற கிராமத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்ட 11 பேரையும் மாவோயிஸ்டுகள் விடுவித்தனர்.

    இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள், புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

    கர்தன்பள்ளி கிராமத்துக்குள் கடந்த திங்கள்கிழமை இரவில் புகுந்த மாவோயிஸ்டுகள் 11 பேரைக் கடத்திச் சென்றனர்.

    அவர்களில் திரிநாத் பூமியா, பொன்டுகு கோலார் ஆகிய இருவரை புதன்கிழமை இரவிலும், மேலும் மூவரை வியாழக்கிழமை காலையிலும் மாவோயிஸ்டுகள் விடுதலை செய்தனர். மீதமுள்ள 6 பேரையும் வியாழக்கிழமை மாலையில் மாவோயிஸ்டுகள் விடுதலை செய்தனர்.

    அவர்கள் அனைவரும் பத்திரமாக வீடுகளுக்குத் திரும்பினர். கடத்தப்பட்ட நபர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் இயக்க அனுதாபிகள்.

    மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வீட்டை விட்டு வெளியேறினர்: இதனிடையே, விடுவிக்கப்பட்ட 11 பேரும், காவல் துறை விசாரணைக்குப் பயந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.

    இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "மாவோயிஸ்டுகளுடன் அந்த 11 பேருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படும்; அவ்வாறு இருந்தால் அவர்கள் சரணடைய வேண்டும். அவர்களது மறுவாழ்வுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai