Enable Javscript for better performance
ரகசிய ஆவணங்களை வகைப்படுத்தும் முறையை மறு ஆய்வு செய்ய முடிவு- Dinamani

சுடச்சுட

    

    ரகசிய ஆவணங்களை வகைப்படுத்தும் முறையை மறு ஆய்வு செய்ய முடிவு

    By dn  |   Published on : 17th April 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசு ரகசிய சட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்த மூன்று நபர் குழு அரசு ஆவணங்களை ரகசியம், ரகசியமல்லாதது என்று வகைப்படுத்துவதற்கு தற்போது பின்பற்றப்படும் முறையை மறுஆய்வு செய்ய வியாழக்கிழமை முடிவெடுத்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

    நேதாஜி குறித்த ரகசியக் கோப்புகளை பகிரங்கப்படுத்துமாறு நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ரகசிய ஆவணங்களை பகிரங்கப்படுத்துவதற்கான சட்ட விதிகள் குறித்து ஆராய செய்ய மூன்று நபர் கொண்ட குழுவை மத்திய அரசு புதன்கிழமை அமைத்துள்ளது.

    இந்தக் குழுவில் மத்திய உள்துறை, சட்டத் துறை, பணியாளர் நலத் துறைச் செயலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    அரசு ரகசியக் காப்புச் சட்டத்தையும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் இந்தக் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்வர்.

    இந்தக் குழு முதல்முறையாக வியாழக்கிழமை கூடியது.

    இந்தக் கூட்டத்தில் அரசு ஆவணங்களை ரகசியம், ரகசியம் அல்லாதது என்று வகைப்படுத்துவது குறித்து தற்போது பின்பற்றப்படும் முறைகள், அதற்கென, அரசு இதுவரை பிறப்பித்துள்ள உத்தரவுகளை மறுஆய்வுக்கு உட்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    பாதுகாப்பு, புலனாய்வுத் துறை அதிகாரிகளையும் இனி நடைபெற உள்ள இந்தக் குழுவின் கூட்டங்களில் பங்கேற்கச் செய்வது என்றும் இந்தக் கூட்டத்தில் முடுவெடுக்கப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai