Enable Javscript for better performance
லஞ்சப் புகாரில் சிக்கினால் கூடுதல் பொறுப்பு கிடையாது- Dinamani

சுடச்சுட

    

    லஞ்சப் புகாரில் சிக்கினால் கூடுதல் பொறுப்பு கிடையாது

    By dn  |   Published on : 17th April 2015 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லஞ்சக் குற்றச்சாட்டில் சிக்கிய மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படாது.

    ஊழியர்களின் பணித் திறன் குறித்த ஆண்டறிக்கையில் சரிவர பணியாற்றாத ஊழியர்களாக குறிப்பிடப்படுவோர், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானோர் ஆகியோருக்கும் கூடுதல் அரசு பொறுப்புகள் வழங்கப்பட மாட்டாது.

    அவ்வாறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கூடுதல் பொறுப்பு வகித்த ஊழியர்களுக்கு அந்தப் பொறுப்பு வகித்ததற்கான ஊதியம் அளிக்கப்படாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai