Enable Javscript for better performance
வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்த பொதுவான இயந்திரம்- Dinamani

சுடச்சுட

    
    rbi

    எந்தவொரு வங்கியில் இருந்தும் நாட்டின் வேறு எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தும் வகையிலான இயந்திரத்தை அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

    வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் நடைமுறை தற்போது பெருமளவு குறைந்துவிட்டது. இதற்கு பதிலாக இணைய வழி பரிவர்த்தனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன.

    இதைத் தவிர, ஏடிஎம் மையங்களிலும், வங்கி வளாகத்தினுளும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த இயந்திரங்களில், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் மட்டுமே பணம் செலுத்த முடியும்.

    ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதைப் போல பணம் செலுத்துவதை பொதுவாகப் பயன்படுத்த முடியாத சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் அனைத்து வங்கிக் கணக்குகளையும் கையாளும் வகையிலான பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத்தை நாடு முழுவதும் அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

    மும்பையில் தேனா வங்கியின் இணைய வழி சேவையை வியாழக்கிழமை தொடக்கி வைத்த ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எச்.ஆர்.கான் இதுகுறித்து கூறியதாவது:

    ஏடிஎம் மையங்களை பொதுவாகப் பயன்படுத்தும் வசதி தற்போது உள்ளது. அதேபோல, பணம் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வருமாறு ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக ஒரு தொழில்நுட்ப முயற்சியை அறிமுகப்படுத்தும்போது, அதைக் கொண்டு லாபம் ஈட்டுவது அவசியம். இல்லாவிட்டால், அத்தகைய புதிய முயற்சிகள் மேற்கொள்ளபடமாட்டாது. அதேபோல, பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத் திட்டமும் முதலில் லாபம் ஈட்டும் நோக்கத்துடன்தான் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai