Enable Javscript for better performance
3 நீதிபதிகள் அமர்வு 21-இல் விசாரணை - Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகும் அரசு சிறப்பு வழக்குரைஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி, திமுக பொதுச் செயலர் க. அன்பழகன் தாக்கல் செய்த மனுவை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வரும் 21-ஆம் தேதி விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    எனினும், அந்த அமர்வில் எந்த நீதிபதிகள் இடம் பெறுவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் வழக்குகள் பட்டியல் பிரிவு துணைப் பதிவாளர் இத்தகவல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    அன்பழகனின் மனு மீது புதன்கிழமை மூத்த நீதிபதி மதன் பி. லோகுரும், நீதிபதி ஆர். பானுமதியும் தனித்தனியாக தீர்ப்பு அளித்தனர். அதில் அன்பழகனின் கோரிக்கையை ஏற்பதாக நீதிபதி மதன் பி. லோகுரும், பவானி சிங் ஆஜராவதில் தவறில்லை என நீதிபதி பானுமதியும் குறிப்பிட்டிருந்தனர். இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இந்த விவகாரம் குறித்து கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க, இரண்டு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர்.

    இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பார்வைக்குக் கொண்டு செல்லும்படியும் நீதிமன்றப் பதிவாளருக்கு இரு நீதிபதிகள் அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது. இந்நிலையில், அன்பழகனின் மனுவை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai