சுடச்சுட

  

  மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த துப்பாக்கித் தொழிற்சாலை கண்டறியப்பட்டது. அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  இது குறித்து போலீஸார் தெரிவித்ததாவது:

  மால்டா மாவட்டத்தில் உள்ள கலியசக் கிராமத்தில் துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று ஆய்வு செய்ததில் அந்த ஆலை சட்ட விரோதமாக இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்து 30 சிறு கைத்துப்பாக்கிகளும், துப்பாக்கிகளும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உற்பத்தி நிலையில் இருந்த 150 துப்பாக்கிகளும், துப்பாக்கி செய்யத் தேவையான மூலப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

  இது தொடர்பாக நஸ்ருல் என்பரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் தொடர்புடைய கல்லூரி மாணவர் ஒருவரிடமும் விசாரணை நடைபெறுகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai