Enable Javscript for better performance
அருணாசல்: முன்னாள் பேரவைத் தலைவர் மறைவு- Dinamani

சுடச்சுட

    

    இடாநகர், ஜன. 26: அருணாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செடாங் சேனா (54), கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு காலமானார்.

    கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் காலமானார். 

    நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அமைச்சராகவும் இருந்துள்ளார். 

    இவரது மறைவுக்கு, அந்த மாநில முதலமைச்சர் நபம் துகி, ஆளுநர் நிர்பய் சர்மா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai