Enable Javscript for better performance
இந்தியா - அமெரிக்கா வர்த்தகச் சிக்கல்கள்: ஒபாமா, மோடி முன்னிலையில் விவாதம்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியா - அமெரிக்கா வர்த்தகச் சிக்கல்கள்: ஒபாமா, மோடி முன்னிலையில் விவாதம்

    By DN  |   Published on : 27th January 2015 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modiobama

    இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் தில்லியில் திங்கள்கிழமை விவாதித்தனர்.

    இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக நடைமுறைகளை மேலும் எளிமையாக்குவது குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இப்பிரச்னைகள் குறித்து விவாதிக்க, தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு மொத்தம் 18 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

    ரிலையன்ஸ், எச்.டி.எஃப்.சி. வங்கி, பார்தி எண்டர்பிரைசஸ், பயோகான், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட 5 நிறுவனங்களின் தலைவர்கள் தலா 2 நிமிடங்கள் கூட்டத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது.

    அதன் பிறகு விவாத நிகழ்ச்சி நடைபெற்றதாகத் தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

    இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்புகளை சுலபமாக்குவது குறித்தும், விசா நடைமுறைகளை எளிமையாக்குவது குறித்தும் எச்.டி.எஃப்.சி வங்கியின்

    தலைமை நிர்வாகி தீபக் பரேக் பேசினார். நவீன நகரம், மின்னணுத் தொழில் பூங்கா மேம்பாடு உள்ளிட்டவை குறித்து பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் சுனில் மித்தல் விவரித்தார்.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில், வேளாண்மை, திறன் மேம்பாடு, நவீனமயாக்கல் உள்ளிட்ட துறைகள் குறித்து கருத்துகளை வெளியிட்டார். அறிவுசார் சொத்துரிமை, மருந்துத் தயாரிப்பில் நிலவும் பிரச்னைகள் குறித்து பயோகான் நிறுவன மேலாண்மை இயக்குநர் கிரண் மஜும்தார் ஷா பேசினார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே திரவ இயற்கை எரிவாயு மீதான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இதன் காரணமாக திரவ எரிவாயு இறக்குமதியில் சிக்கல் நிலவுவதாகவும் எண்ணெய் - இயற்கை எரிவாயு நிறுவனத் (ஓ.என்.ஜி.சி) தலைவர் தினேஷ் ஷெராஃப் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai