Enable Javscript for better performance
இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்திய, பாகிஸ்தான் படையினர்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் 3 இடங்களில் இந்திய ராணுவத்தினரும், பாகிஸ்தான் ராணுவத்தினரும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

    இதுகுறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது:

    குடியரசு தினத்தை முன்னிட்டு உரி பகுதியில் ஸ்ரீநகர்- முசாஃபராபாத் சாலையை ஒட்டியுள்ள எல்லையில் இந்திய படையினரும், பாகிஸ்தான் ராணுவத்தினரும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். காஷ்மீரில் தங்தார் பகுதியிலும், ஜம்மு பிராந்தியத்தில் பூஞ்ச் பகுதியிலும் இருதரப்பு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

    எல்லையில் அத்துமீறல், ஊடுருவல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவது ஒருபுறம் இருக்கையில், இருதரப்பு படையினரும் தங்கள் தேச முக்கியத்துவம் வாய்ந்த

    நாள்களில் எல்லையில் இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai