Enable Javscript for better performance
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பிரதிபலிக்காத கலாசார ஊர்தி அணிவகுப்பு- Dinamani

சுடச்சுட

    

    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பிரதிபலிக்காத கலாசார ஊர்தி அணிவகுப்பு

    By DN  |   Published on : 27th January 2015 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகம், கேரளம் உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் 13 மாநிலங்களின் கலாசார ஊர்திகள் இடம்பெறவில்லை.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின்போது தில்லியில் நாட்டின் வல்லமையை பறைசாற்றும் ராணுவ அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். அத்துடன், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியங்களை விளக்கும் கலாசார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறும்.

    இம்முறை நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில், மத்திய அரசுத் துறைகள், 16 மாநிலங்களில் இருந்து 25 கலாசார ஊர்திகள் இடம்பெற்றன.

    பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான "இந்தியாவில் தயாரிப்போம்',"அனைவருக்கும் வங்கிக் கணக்கு', "கங்கையைக் காப்போம்', "பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' உள்ளிட்ட திட்டங்களின் சார்பில் ஊர்திகள் அணிவகுத்து வந்தன.

    இதேபோல பாஜக ஆளும் மாநிலங்களின் சார்பில் கலாசார ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெற்றன.

    அதே நேரத்தில், பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலமும், அதன் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் ஆளும் பஞ்சாப் மாநிலமும் அணிவகுப்பில் இடம்பெறவில்லை.

    தமிழகம், கேரளம், பிகார், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயம், மணிப்பூர், மிசோரம், இமாசலப் பிரதேசம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் 13 மாநிலங்கள் கலாச்சார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai