Enable Javscript for better performance
ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்து: அகிலேஷ் வருத்தம்- Dinamani

சுடச்சுட

    
    akileshobama

    அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்தானதை சுட்டிக்காட்டி, "அவரை வரவேற்க கிடைத்த வாய்ப்பு தவறிவிட்டது வருத்தம் அளிக்கிறது' என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக முகநூல் (ஃபேஸ்புக்) சமூக வலைதளப் பக்கத்தில் அகிலேஷ் யாதவ் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

    குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த விருந்தில் பங்கேற்றேன். உலகின் 2 மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் மக்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதில் ஓர் அங்கமாக திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், தாஜ்மகாலில் ஒபாமாவை வரவேற்க கிடைத்த வாய்ப்பு தவறிவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தில்லியில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விருந்தளித்தார். இதில் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

    அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்கு தனது மனைவி மிச்செல்லுடன் செவ்வாய்க்கிழமை சென்று சுற்றிப் பார்ப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சவூதி அரேபியா மன்னர் அப்துல்லா கடந்த வியாழக்கிழமை காலமானார். அதையடுத்து, அப்துல்லாவின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க சவூதி அரேபியாவுக்கு ஒபாமா செவ்வாய்க்கிழமை செல்கிறார். இதனால், ஆக்ரா செல்லும்  ஒபாமாவின் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai