Enable Javscript for better performance
குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த முகநூல்!- Dinamani

சுடச்சுட

    

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவரை, முகநூல் பதிவு காட்டிக் கொடுத்துள்ள சம்பவம்,அங்கு போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்த மாநில டி.ஜி.பி.க்கு எழுதியுள்ள

    கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    கடந்த 2006ஆம் ஆண்டில் நடந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த சத்ராம் நேதாஜி, சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த செüத்ரி ராஜேந்திரா ஆகிய இருவரும் சமீபத்தில்

    லோனி பகுதியில் ஆடை விற்பனையகத்தைத் திறந்து வைத்துள்ளனர்.

    அந்தப் புகைப்படத்தை, கட்சியின் முன்னாள் செயலர் ஒருவர், இந்த மாதம் 7-ஆம் தேதி, முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    ஆனால், அவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட கிராமத்தில் இல்லை என நீதிமன்றத்தில் காவல் துறை ஆய்வாளர் தவறான அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், மேற்கூறிய இருவரும் முகநூல் மூலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள மாநில டி.ஜி.பி.க்கு

    கூறப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai