Enable Javscript for better performance
நாடு முழுவதும் அமைதியாக நடந்த குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    
    flg

    புது தில்லி, ஜன.26: நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் திங்கள்கிழமை குடியரசு தின விழா அமைதியாக நடந்து முடிந்தது.

    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் இபோபி சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசுகையில், "மாநிலத்தின் வளர்ச்சிக்காக,

    கிளர்ச்சியாளர்கள் வன்முறையை கைவிட வேண்டும். வன்முறை எந்த நன்மையையும் கொடுப்பதில்லை. மாறாக மக்களுக்கு பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்றார்.

    நாகாலாந்து மாநிலம், கோஹிமாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆளுநர் பி.பி. ஆசார்யா பேசியதாவது:

    மத்திய அரசுக்கும், நாகா இனக் குழுவினருக்கும் இடையே சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும். நாகா இன குழுவினரின் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காண மாநில அரசு துணைபுரியும் என்றார்.

    அஸ்ஸாம் மாநிலத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் தருண் கோகோய் பேசியதாவது:

    இன மோதலால் பாதிப்படைந்த பழங்குடியினரின் மறுவாழ்வுக்கு சிறப்பு நிவாரணம் அளிக்கப்படும். இனமோதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசுகையில், "அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு இந்நேரத்தில் வந்திருப்பது பெருமைக்குரிய விஷயம்' என்றார்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசு தின விழாவில் ஆளுநர் சி. வித்யாசாகர் ராவ் பேசுகையில், 2022க்குள் மாநிலத்தில் 4.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறனை உருவாக்க பயிற்சி அளிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார்.

    ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai