Enable Javscript for better performance
\\\"அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு மத்திய அரசு பணிந்துவிட்டது\\\'- Dinamani

சுடச்சுட

    

    "அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு மத்திய அரசு பணிந்துவிட்டது'

    By dn  |   Published on : 28th January 2015 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு மத்திய அரசு பணிந்துவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது.

    இதுகுறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அணு உலை விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்காக 2010-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.

    போபால் விபத்தை முன்னுதாரணமாக வைத்து இந்தச் சட்டத்தின் ஷரத்துகள் உருவாக்கப்பட்டன. இந்தச் சட்டத்தை நிர்மூலமாக்கும் வகையில் தற்போது அமெரிக்காவுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    இதன் மூலம் இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட அணு உலைகளில் விபத்து நேரிட்டால் இந்திய மக்களின் வரிப் பணம் மூலமே இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு மத்திய அரசு பணிந்துவிட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai