Enable Javscript for better performance
அரசு மரியாதையுடன் ஆர்.கே.லட்சுமண் உடல் தகனம்- Dinamani

சுடச்சுட

    

    மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் உடல், மகாராஷ்டிர மாநிலம், புணேவில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    முன்னதாக, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

    மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட லட்சுமணின் உடலுக்கு அவரது மகன் ஸ்ரீநிவாஸ், இறுதிச் சடங்குகளை செய்தார். இதையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    மோடி இரங்கல்: ஆர்.கே.லட்சுமண் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய இரங்கல் செய்தியில், "மாபெரும் கார்ட்டூனிஸ்டை நாம் இழந்துவிட்டோம். இனி எப்போதும் காலைப் புன்னகை என்பதே கிடையாது' என குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai