Enable Javscript for better performance
அலைக்கற்றை ஏலம் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த அலைக்கற்றை ஏலம், மார்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

    அலைக்கற்றை ஏலத்துக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசமும் பிப்ரவரி 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அலைக்கற்றைக்கான ஏலம் அடுத்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு பிப்ரவரி 6-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

    அலைக்கற்றை ஏலத்தின் மூலம் கடந்த ஆண்டு ரூ.62,162 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்தது. இந்த ஆண்டு அது ரூ.64,840 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai