Enable Javscript for better performance
இந்தியப் பயணத்தை நிறைவு செய்தார் ஒபாமா- Dinamani

சுடச்சுட

    
    obama

    அமெரிக்க அதிபர் ஒபாமா, மூன்று நாள் இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

    தனது மனைவி மிச்செலுடன் ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்த அவர், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

    முன்னதாக, தாஜ்மகாலை செவ்வாய்க்கிழமை பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், சவூதி அரசர் அப்துல்லாவின் மறைவையடுத்து, ஆக்ரா பயணத்தை ரத்து செய்தார்.

    இதையடுத்து, சவூதி அரேபிய மன்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, தில்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து "ஏர் ஃபோர்ஸ் ஒன்' தனி விமானத்தில் ஒபாமாவும், அவரது மனைவியும் புறப்பட்டுச் சென்றனர்.

    அவர்களை மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

    அப்போது, "நமஸ்தே' என்று பாரம்பரிய முறையில் இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தும், கையசைத்தும் அவர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai