Enable Javscript for better performance
இந்திய - அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம்- Dinamani

சுடச்சுட

    
    modi

    அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணம், இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

    உங்களது (ஒபாமா) பயணம், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை புதிய கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இது, இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது. தில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது மழை பெய்தது, ஒபாமாவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதனால், குடையை தனது கையில் ஒபாமா கொண்டு வர வேண்டியதாகிவிட்டது. அமெரிக்கப் பாடகர் மரியன் ஆண்டர்சன் 1957ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது அகில இந்திய வானொலிக்கு அளித்த பேட்டி, பதிவு செய்யப்பட்ட விடியோ காட்சிகளின் நகல்களை ஒபாமாவிடம் பரிசாக அளித்தேன் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

    மோடிக்கு வெள்ளை மாளிகை நன்றி: இந்நிலையில், அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை, ஒபாமாவின் இந்தியப் பயணத்தை வெற்றிகரமாக்கியதற்காக பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சுட்டுரை சமூக வலைதளப் பக்கத்தில் வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், "இந்த பயணம் வெற்றிகரமானதாக அமைந்ததற்கு, நரேந்திர மோடிக்கு நன்றி; சிறப்பான வரவேற்பு அளித்த இந்திய மக்களுக்கு நன்றி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai