Enable Javscript for better performance
\\\"உடல் நல விவரங்களையும் வேட்பாளர்கள் வெளியிட வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "உடல் நல விவரங்களையும் வேட்பாளர்கள் வெளியிட வேண்டும்'

    By dn  |   Published on : 28th January 2015 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடுவதுபோல, உடல் நலம் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியது.

    தில்லியில் அடுத்த மாதம் 7ஆம் தேதி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்திய மருத்துவ சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.கே. அகர்வால் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "அடுத்த 5 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட வேட்பாளர்கள் உடல் நலத்துடன் இருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது' என்றார்.

    சங்கத்தின் தேசிய தலைவர் ஏ. மார்த்தாண்ட பிள்ளை கூறியதாவது:

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

    பொதுத் துறை நிறுவனங்களில் ஒருவர் பணிக்கு சேரும்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. உடல்நல குறைபாடு கண்டறியப்பட்டால் அந்த நபர் பணியில் சேர முடியாது. விளையாட்டு வீரர்களும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளாமல் விளையாட முடியாது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளாமல் எப்படி அனுமதிக்கப்படுகின்றனர்? என்று மார்த்தாண்ட பிள்ளை கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai