Enable Javscript for better performance
ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீது ஜெயலலிதா தரப்பில் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீது ஜெயலலிதா தரப்பில் குற்றச்சாட்டு

    By dn  |   Published on : 28th January 2015 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை மேற்கொண்ட தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு, ஜெயலலிதாவை பல்வேறு நிறுவனங்களின் பங்குதாரர்களாகச் சேர்த்துள்ளனர்' என்று அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வி.குமார் வாதிட்டார்.

    சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர் குமார், "ஜெயா பப்ளிகேஷன், நமது எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நிறுவனங்களில் மட்டுமே ஜெயலலிதா பங்குதாராக உள்ளார்.

    ஆனால், இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சசிகலா, இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களில் ஜெயலலிதாவின் பெயரைச் சேர்த்துள்ளனர்' என்றார்.

    சசிகலா தரப்பில் புதன்கிழமை இறுதி வாதம் நடைபெறுகிறது. அவரது தரப்பில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பசந்த் ஆஜராகி வாதிடுகிறார்.

    அன்பழகன் தரப்பில் வாதிட வாய்ப்பு: மேல்முறையீட்டு மனு விசாரணையில் ஆஜராகி வாதிட திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்குரைஞருக்கு நீதிபதி வாய்ப்பு அளித்தார்.

    ஆனால், அன்பழகன் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால், மனு மீதான விசாரணை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    இதனிடையே, இந்த வழக்கில் ஆஜராகி வாதிட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை புதன்கிழமை (ஜன.28) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai