Enable Javscript for better performance
ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.98 கோடி- Dinamani

சுடச்சுட

    

    திருமலை ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.98 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருமலை ஏழுமலையானை தரிசிக்க வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும். பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்போது, உண்டியல் வருமானமும் அதிகமாக இருக்கும்.

    அந்தவகையில், கடந்த 3 நாள்களாக பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை மாலை வரை பக்தர்கள் ஏழுமலையானுக்குச் செலுத்திய உண்டியல் காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.2.98 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai