Enable Javscript for better performance
ஒபாமாவை சந்தித்தபோது பிரதமர் மோடி அணிந்திருந்த \\\"சூட்\\\' ரூ.10 லட்சம்?- Dinamani

சுடச்சுட

    

    ஒபாமாவை சந்தித்தபோது பிரதமர் மோடி அணிந்திருந்த "சூட்' ரூ.10 லட்சம்?

    By dn  |   Published on : 28th January 2015 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi_dress

    குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்தபோது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட், சூட்டின் விலை ரூ.10 லட்சம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    பிரதமர் மோடி தில்லி விமான நிலையத்தில் அதிபர் ஒபாமாவை ஞாயிற்றுக்கிழமை வரவேற்க சென்றிருந்தபோது பாரம்பரிய உடையான குர்தா பைஜாமா அணிந்திருந்திருந்தார். ஹைதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா- பிரதமர் மோடி மதிய வேளையில் சந்தித்துப் பேசினர். அப்போது, "பந்த்கலா' எனும் கருப்பு நிறத்திலான கோட், சூட்டை மோடி அணிந்திருந்தார். அந்த ஆடையில் இழைக்கப்பட்டிருந்த தங்க நிறக் கோடுகளில் "நரேந்திர தாமோதர்தாஸ் மோடி' எனும் பிரதமரின் முழுமையான பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

    இதுஒருபுறம் இருக்க, பிரதமர் மோடி அணிந்திருந்த சூட்டின் மதிப்பு 10 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்பு ரூ.9,27,500) இருக்கும் என்று இங்கிலாந்தில் வெளியாகும் "லண்டன் ஸ்டாண்டர்டு' எனும் செய்தி இதழிலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    தங்க நிற நூலில் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி எனும் பெயர் அனைத்து இடங்களிலும் பொறிக்கப்பட்ட அந்த சூட் தயாரிப்பதற்கான துணி இழைகள், லண்டனைச் சேர்ந்த ஹாலந்து மற்றும் ஷெர்ரி ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    மேலும், அந்த உடைக்கான துணி மட்டும் 2,500 பவுண்ட் முதல் 3 ஆயிரம் பவுண்ட் (ரூ.2,500 முதல் ரூ.2,78,250) வரை இருக்கலாம் என்றும், அதன்அடிப்படையில், ஹாலண்ட், ஷெர்ரி நிறுவனங்கள் துணி இழைகளை விற்பனை செய்யும் தையல் கலைஞர் டாம் ஜேம்ஸ் இந்த உடையைத் தைத்திருப்பின் அதன் விலை 10 ஆயிரம் பவுண்ட் (ரூ.9,27,500) இருக்கும் என்பதும் அந்த இதழின் ஊகம்.

    எனினும், சம்பந்தப்பட்ட இரு துணி நிறுவனங்களும், தையல் கலைஞரும் பிரதமர் மோடி தங்களது வாடிக்கையாளர் இல்லை என்றும், உடையின் விலை ரூ.10 லட்சம் என்பதையும் உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.

    ஆனால், "இதேபோன்று வேறு யாரும் வடிவமைக்க முடியும் என்று நினைக்கவில்லை' என்று ஹாலாந்து மற்றும் ஷெர்ரி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. டாம் ஜேம்ஸ் கூறுகையில், "இதுபோன்ற பாணியில் ஆடை வடிவமைப்பது நாங்கள் மட்டுமே இருப்போம் என நம்புகிறேன்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai