Enable Javscript for better performance
ஒபாமா, மோடியின் வானொலி உரை: சமூக பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்- Dinamani

சுடச்சுட

    

    ஒபாமா, மோடியின் வானொலி உரை: சமூக பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்

    By dn  |   Published on : 28th January 2015 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi_obama

    அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி இணைந்து வானொலியில் ஆற்றிய உரை, சமூக பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தது.

    வானொலியில் செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பப்

    பட்ட உரையில் நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன் "நமஸ்தே' என்று ஹிந்தியில் வணக்கம் தெரிவித்து ஒபாமா தனது பேச்சைத் தொடங்கினார்.

    இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஒருங்கிணைந்து செயல்பட விரும்புவதாக ஒபாமா தெரிவித்தார்.

    உள்கட்டமைப்பு, மின் உற்பத்தி மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படுவது குறித்து வானொலி நிகழ்ச்சியில் மோடியுடன் ஒபாமா கலந்துரையாடினார்.

    இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

    "மன் கீ பாத்' நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட நேயர்களின் கேள்விகளில் பெரும்பாலனவை அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, பொருளாதாரம் சார்ந்து இருந்தது. சில கேள்விகள் இதயத்தைத் தொடும் வகையில் அமைந்திருந்தது.

    இந்நிகழ்ச்சியின் வாயிலாக நாங்கள் அளிக்கும் பதில்கள், நாட்டின் அனைத்து மூலையிலும் மக்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்று மோடி பேசினார்.

    "மன் கீ பாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக கடந்த அக்டோபர் முதல் மாதந்தோறும் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றி வருகிறார். இந்த மாத வானொலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் மோடியுடன் இணைந்து உரையாற்றினார். திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்ட அவர்களது உரையாடல், செவ்வாய்க்கிழமை இரவு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai