Enable Javscript for better performance
கர்நாடக அமைச்சர் ராஜிநாமா- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக கலால் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

    சதீஷ் ஜார்கிஹோளி, பெலகாவி மாவட்டம், கோகாக் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானார்.

    சித்தராமையாவின் தீவிர ஆதரவாளரான இவர் செவ்வாய்க்கிழமை தனது ராஜிநாமா கடிதத்தை, முதல்வர் சித்தராமையா, சட்டப்பேரவைச் செயலர், மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் ஆகியோருக்கு அனுப்பினார்.

    இதுகுறித்து பெலகாவியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    அமைச்சரான பிறகு சமூகப் பணிகளில் அதிக அளவில் ஈடுபட முடியவில்லை.

    மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராட முடியவில்லை. எனவே, எனது பதவியை ராஜிநாமா செய்ய கடந்த 6 மாதங்களாக யோசித்து வந்தேன்.

    அமைச்சர் பணியைச் சிறப்பாக செய்த திருப்தி உள்ளது. பதவியிலிருந்து விலகி, கட்சியைப் பலப்படுத்தும் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் முழுமையாக ஈடுபட முடிவு செய்துள்ளேன் என்று அவர் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai