Enable Javscript for better performance
கேஜரிவாலின் வேட்புமனு ரத்து செய்யப்பட வேண்டும்: பாஜக, காங்கிரஸ் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கேஜரிவாலின் வேட்புமனு ரத்து செய்யப்பட வேண்டும்: பாஜக, காங்கிரஸ் வலியுறுத்தல்

    By dn  |   Published on : 28th January 2015 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    delhi_polls

    ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளரான அரவிந்த் கேஜரிவாலின் வேட்பு மனு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தன.

    இதுகுறித்து தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் கூறியதாவது:

    வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாகக் கூறி பாஜகவின் பெயருக்கு அரவிந்த் கேஜரிவால் களங்கம் ஏற்படுத்தி வருகிறார். அவர் தில்லி மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார்.

    எனவே, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் அவருக்கு எதிராக 5 புகார் அளித்துள்ளோம். அவரது வேட்பு மனு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், மேற்கொண்டு அவர் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம் என்று சதீஷ் உபாத்யாய் கூறினார்.

    காங்கிரஸ் குற்றச்சாட்டு: இதனிடையே, அரவிந்த் கேஜரிவால் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிரண் வாலியா கூறியதாவது:

    ஒரு முன்னாள் முதல்வர் எப்படி ஒவ்வொரு முறையும் தவறான முகவரியைத் தருகிறார்? அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட வேண்டும்.

    தில்லி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து, திலக் லேனில் இருந்து கெüஷாம்பி பகுதிக்கு அரவிந்த் கேஜரிவால் இடம்பெயர்ந்துள்ளார். ஆனால், வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தில் விட்டல் பாய் வீட்டு முகவரியை அளித்துள்ளார். இருப்பினும், தேர்தல் ஆணையம் அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது.

    அதையடுத்து, புது தில்லி தொகுதியில் பிகே தத் காலனி பகுதியில் உள்ள தனது அலுவலகத்தின் முகவரியுடன் மீண்டும் விண்ணப்பித்தார். ஆனால், தேர்தல் ஆணையம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம் என்று கிரண் வாலியா கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai