Enable Javscript for better performance
கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு- Dinamani

சுடச்சுட

    
    ec

    வாக்காளர்களை பணம் பெற்றுக் கொள்ளும்படி தவறாக வழிநடத்துவதை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தேர்தல் ஆணைய உத்தரவில் கூறியிருப்பதாவது:

    தேர்தலின்போது கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளும்படி பிரசாரங்களின் போது நீங்கள் தொடர்ந்து பேசி வருவது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளது.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியும், இவ்வாறு பேசுவதை நீங்கள் நிறுத்திக் கொள்ளவில்லை.

    தேர்தல் விதிகளை அவமதிக்கும் வகையில் இனி பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கேஜரிவால் பேசுகையில், ""தேர்தல் சமயங்களில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பணம் கொடுத்தால் வாக்காளர்கள் அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள். அந்தப் பணம், நிலக்கரிச் சுரங்க முறைகேடு, 2ஜி முறைகேடு ஆகியவற்றில் கிடைத்தவையாக இருக்கும். கடந்த 60 ஆண்டுகளாக அக்கட்சிகள் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. இப்போது நமது தருணம். நாம் அவர்களை ஏமாற்றுவோம்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai