Enable Javscript for better performance
கொல்கத்தா முழுவதும் விரைவில் வை-ஃபை வசதி: மம்தா பானர்ஜி- Dinamani

சுடச்சுட

    

    கொல்கத்தா முழுவதும் விரைவில் வை-ஃபை வசதி: மம்தா பானர்ஜி

    By dn  |   Published on : 28th January 2015 03:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mamta_banerjee

    மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தா முழுவதும் இன்னும் இரு மாதங்களில் வை-ஃபை வசதி வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

    கொல்கத்தாவில் புத்தக கண்காட்சியை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து, இதுதொடர்பாக அவர் பேசியதாவது:

    4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய வை-ஃபை வசதி, கொல்கத்தா நகரம் முழுவதும் 2 மாதங்களில் வழங்கப்படும். இதில் முதல்கட்டமாக, பார்க் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் இந்த வசதி இலவசமாக வழங்கப்படும்.

    அதைத் தொடர்ந்து, இரு மாதங்களுக்குள் கொல்கத்தா முழுவதும் வை-ஃவை வசதி அளிக்கப்படும். இதன்மூலம், நாட்டிலேயே முதல்முறையாக 4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய வை-ஃபை வசதி அளிக்கப்பட்ட நகரம் என்னும் பெருமையை கொல்கத்தா பெறும். கொல்கத்தாவை வை-ஃபை நகரமாக்கும் பெருமை "ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனத்தைச் சேரும் என்று அவர் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai