Enable Javscript for better performance
சாரதா நிதி மோசடி: ஜன.30-ல் முகுல் ராய் ஆஜர்- Dinamani

சுடச்சுட

    

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற வெள்ளிக்கிழமை (ஜன.30) ஆஜராவதாக திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் ராய் உறுதியளித்துள்ளார் என்று சிபிஐ அதிகாரிகள் கூறினர்.

    இது குறித்து சிபிஐ தரப்பில் கூறியதாவது:

    மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம், முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடியில் தொடர்புடையதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள், மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அண்மையில் முகுல் ராய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து இம்மாதம் 30-ஆம் தேதி, வழக்கு விசாரணைக்கு தான் ஆஜராவதாக முகுல் ராய் உறுதியளித்துள்ளார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai