Enable Javscript for better performance
தாஜ்மஹாலைப் பார்க்க மீண்டும் இந்தியா வருவேன்: மிச்செல் ஒபாமா- Dinamani

சுடச்சுட

    

    தாஜ்மஹாலைப் பார்க்க மீண்டும் இந்தியா வருவேன்: மிச்செல் ஒபாமா

    By dn  |   Published on : 28th January 2015 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    michelle_obama

    தாஜ்மஹாலைப் பார்ப்பதற்காகவே மீண்டும் இந்தியாவுக்கு வருவேன் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா தெரிவித்தார்.

    சவூதி அரேபியாவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மிச்செல் ஒபாமா பதிலளித்துப் பேசினார்.

    காதலின் சின்னமாகக் கருதப்படும் தாஜ்மஹாலைப் பார்க்க முடியாமல் போனது தங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

    அதற்குப் பதிலளித்த மிச்செல் ஒபாமா, "ஆமாம், அது ஏமாற்றத்தைத் தருகிறது. தாஜ்மஹாலைப் பார்ப்பதற்காகவே மீண்டும் இந்தியாவுக்கு வருவேன்' என்று கூறினார்.

    மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவருடைய மனைவி மிச்செல் ஒபாமாவும் ஆக்ரா சென்று தாஜ்மஹாலைப் பார்ப்பதாக முதலில் திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால், சவூதி அரேபியா மன்னர் அப்துல்லாவின் மறைவைத் தொடர்ந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஒபாமாவின் பயணத்திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டது. அதன்படி, ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டது. அதனால், அவர்களால் தாஜ்மஹாலைப் பார்க்க முடியவில்லை.

    இந்தியாவுக்கு வருகை தரும் உலகத் தலைவர்களும், பிற நாட்டின் அதிபர்களும், பிரதமர்களும் தாஜ்மஹாலைப் பார்வையிடுவது வழக்கம். இதற்கு முன்பு, 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்த ஃபிரான்ஸ் நாட்டின் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, தனது மனைவியுடன் தாஜ்மஹாலுக்குச் சென்றிருந்தார்.

    கடந்த 2001-ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், தனது மனைவியுடனும், 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தனது மனைவியுடனும், அதே ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், தனது மகள் செல்சியாவுடனும் தாஜ்மஹாலைப் பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai