Enable Javscript for better performance
நாட்டின் பொருளாதாரம் இலக்கை எட்டும்: அருண் ஜேட்லி- Dinamani

சுடச்சுட

    
    arun_jaitley

    "உற்பத்தித் துறை வளர்ச்சியடையத் தொடங்கி இருப்பதால், நாட்டின் பொருளாதாரம் இலக்கை எட்டக் கூடும்' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

    தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

    இந்தியா மீது இரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, கொள்கை விவகாரங்களில் மிகவும் மெதுவாக முடிவுகளை எடுப்பது, மற்றொன்று, கொள்கைகளில் நிலையற்ற தன்மை. இந்தக் குறைகள் குறித்து, உலக அளவில் பல்வேறு அமைப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன. இவை, இந்தியாவின் ஆட்சியமைப்பிலும், நிர்வாகத்தில் வரும் எதிர்ப்புகளாலும் வருபவைகளாகும்.

    தில்லியில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி, அதிகாரிகளுடனான சந்திப்பிலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

    வருவாய் இலக்கு: நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதவீதம் அளவுக்கு நிதி வருவாயை அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதால், கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமாக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 2.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    உலக அளவில் பல்வேறு நாடுகளின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

    இந்நிலையில், கடந்த சில நாள்களாக இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் இலக்கை எட்டக் கூடும் என்று ஜேட்லி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai