Enable Javscript for better performance
பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: குடியரசு தினத்தில் விருது பெற்ற ராணுவ அதிகாரி மரணம்- Dinamani

சுடச்சுட

    

    பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: குடியரசு தினத்தில் விருது பெற்ற ராணுவ அதிகாரி மரணம்

    By dn  |   Published on : 28th January 2015 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rai

    ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டம் அருகே பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில், குடியரசு தினத்தில் விருது பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் எம். என். ராய் உள்பட பாதுகாப்புப் படையினர் இருவர் உயிரிழந்தனர்.

    இந்தச் சண்டையில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதுகுறித்து பாதுகாப்புப் படையினர் கூறியதாவது: புல்வாமா மாவட்டம், மிந்தோரா கிராமத்தில் உள்ள தங்களது வீடுகளுக்கு ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் செல்வதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    உயிரிழந்தவர்கள், ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அதில் கான், சிராஜ் தர் என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சண்டையின்போது, ராணுவ அதிகாரி கர்னல் எம்.என்.ராய், போலீஸ் காவலர் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கர்னல் எம்.என்.ராய்க்கு, திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஒமர் இரங்கல்: பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினருக்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai