Enable Javscript for better performance
பிகார் தேர்தல்: காங்கிரஸ் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    உள்கட்சிப் பூசலைத் தீர்க்கவும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பிகார் தேர்தலை முன்னிட்டும் காங்கிரஸ் கட்சியின் நான்கு நாள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

    கட்சியின் மாநில தலைமையகத்தில், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், பிகார் மாநில மேலிட பார்வையாளருமான சி.பி.ஜோஷி தலைமையில் கூட்டம் துவங்கியது.

    இந்தக் கூட்டத்தில், மாநிலத்தில் உள்கட்சிப் பூசலைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் கட்சித் தலைவர்கள் இறங்கியுள்ளனர். மேலும், கீழ்மட்ட அளவில் கட்சியைப் பலப்படுத்துவதற்காக, மாவட்ட, வட்டார அளவிலான தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அகிலேஷ் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். சமீபத்தில் பிகார் காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனையில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துமாறு உத்தரவிட்டார். அது குறித்தும், பிகாரில் ஜனதா கட்சிகள் ஒன்றாக இணைவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai