Enable Javscript for better performance
பிப்.6-இல் மத்திய கொள்கை குழுவின் முதல் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய கொள்கைக் குழுவின் முதல் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் முந்தைய மத்தியத் திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு மத்திய கொள்கைக் குழு என்ற புதிய அமைப்பை உருவாக்கியது.

    கடந்த 6-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் செயல்பாடுகள் இன்னும் வரையறுக்கப்படாத நிலையில், இதன் முதல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த அமைப்பின் தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார். மத்திய கொள்கைக் குழுவின் செயல்பாடுகள், விதிமுறைகள், திட்டங்கள் ஆகியவை இந்தக் கூட்டத்தின்போது வரையறுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும், இந்த அமைப்பு முந்தைய திட்டக் குழுவைப் போல் அரசின் அங்கமாகச் செயல்படுமா அல்லது பொருளாதாரத் திட்டங்களை மட்டும் வகுக்கும் அமைப்பாக இருக்குமா என்பதும் இக்கூட்டத்தில் விவரிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    இந்நிலையில், மத்திய கொள்கைக் குழுவின் நிர்வாகக் குழுக் கூட்டம் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இதற்கு முன்னோட்டமாகவே பிப்ரவரி 6-ஆம் தேதி கூட்டம் நடைபெறவுள்ளதாக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக, மத்திய கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக அரவிந்த் பனகரியா, முழு நேர உறுப்பினராக விவேக் தேவ்ராய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai