Enable Javscript for better performance
\\\"பிரதமர் மோடி தற்பெருமைக்காரர்\\\'- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பின்போது, தனது பெயர் வைத்து தைக்கப்பட்ட உடையை பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்தது குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது தற்பெருமை மனோபாவம் எனக் கூறியுள்ளது.

    இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது, "நரேந்திர தாமோதர்தாஸ் மோடி' என தனது பெயர் தைக்கப்பட்ட உடையை அவர் அணிந்திருந்தார்.

    இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், செவ்வாய்க்கிழமை கூறுகையில், "இது மோடியுடைய தற்பெருமை மனோபாவத்தைக் காட்டுகிறது' என்றார்.

    நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த போதிலிருந்தே ஆமதாபாதில் உள்ள "ஜேட் புளூ' என்ற நிறுவனம்தான் அவருக்கான உடைகளை வடிவமைத்து வருகிறது. இதற்கு முன்னர், எகிப்து அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக், இதுபோன்று தனது பெயர் கொண்ட உடையை அணியும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai