Enable Javscript for better performance
பெங்களூரில் பயங்கரவாதி கைது- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் மேலும் ஒரு போடோ பயங்கரவாதியை போலீஸார் கைது செய்தனர்.

    இதுகுறித்து பெங்களூரில் மாநகரக் காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

    கடந்த 24-ஆம் தேதி பெங்களூரு காட்டன் பேட்டை காவல் சரகத்தில் "போடோ' பயங்கரவாதி பிர்காஸ் சர்ஜாரி கைது செய்யப்பட்டார்.

    அவர் அளித்த தகவலின் பேரில், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் திங்கள்கிழமை மேலும் ஒரு போடோ பயங்கரவாதி சஞ்சீவ் போடோலாய் (27) கைது செய்யப்பட்டார். விசாரணையில், இவர் பெங்களூருவில் கடந்த 21-ஆம் தேதி முதல் தங்கியிருந்தது தெரிய வந்தது. இவர் போடோ அமைப்பின் செயலாளராக இருந்துள்ளார்.

    வங்க தேசத்தில், 2009 முதல் 2012 வரை பயரங்கவாத பயிற்சி பெற்ற இவரை, அஸ்ஸாம் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    அஸ்ஸாம் மாநிலம், சாந்திப்பூர் கிராமத்தில் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி, கிராமவாசிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், சஞ்சீவ் போடோலாய் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

    கைதுசெய்யப்பட்ட போடோ பயங்கரவாதிகளிடம் விசாரணை நடத்த அஸ்ஸாம் போலீஸார் விரைவில் பெங்களூரு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai