Enable Javscript for better performance
போர் விமானம் விபத்து- Dinamani

சுடச்சுட

    

    ராஜஸ்தான் மாநிலம், பார்மர் அருகே செவ்வாய்க்கிழமை, இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    மிக்-27 ரக போர் விமானம், செவ்வாய்க்கிழமை ஜோத்பூர் தளத்தில் இருந்து உத்தர்லாய் படைத் தளத்திற்கு புறப்பட்டது.

    பிற்பகல் 3.10 மணியளவில் பார்மர் அருகே கீழே விழுந்து நொறுங்கியது.

    விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விமானத்தின் பாகங்களை மீட்க ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai