Enable Javscript for better performance
மத்திய அரசின் குடியரசு தின விளம்பரத்தால் சர்ச்சை- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள அரசியலமைப்பின் முன்னுரைப் பக்கப் படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள மதச்சார்பின்மை, சோஷலிஸம் ஆகிய இரு வார்த்தைகள் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த படத்தில் இல்லாததே இதற்குக் காரணம்.

    இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சருமான மணீஸ் திவாரி சுட்டுரையில் (டுவிட்டரில்), மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ரதோர் கூறியதாவது: அரசியல் சாசனத்தின் 42ஆவது சட்டத் திருத்தத்தில்தான், அதன் முன்னுரையில் மதச்சார்பின்மை, சோஷலிஸம் என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.

    தற்போது, விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது அரசியல்சாசன இயற்றப்பட்டபோது அதன் முன்னுரை குறித்த படமாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் இதே படத்தைதான், அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் பயன்படுத்தியுள்ளது. அப்போது இடம்பெற்ற படத்திலும் தவறில்லை. அதேபோல், தற்போது இடம்பெற்றுள்ள படத்திலும் தவறில்லை என்று அமைச்சர் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai