Enable Javscript for better performance
மாநிலங்களின் செயல்பாடுகளால்தான் மத்திய அரசுத் திட்டங்களுக்கு வெற்றி: அகிலேஷ் யாதவ்- Dinamani

சுடச்சுட

    

    மாநிலங்களின் செயல்பாடுகளால்தான் மத்திய அரசுத் திட்டங்களுக்கு வெற்றி: அகிலேஷ் யாதவ்

    By dn  |   Published on : 28th January 2015 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    akliesh_yadav

    மாநில அரசுகளின் சிறப்பான செயல்பாடுகளால்தான் மத்திய அரசின் திட்டங்கள் வெற்றியடைய முடியும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

    உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னெளவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

    மத்திய அரசின் திட்டமான ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்குகளைக் தொடக்கி வைக்கும் திட்டம், உத்தரப் பிரதேசத்தில் சிறப்பான அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    நாட்டிலேயே உ.பி.யில் தான் அதிக எண்ணிக்கையிலான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதாக அண்மையில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசு முன்னணியில் உள்ளது.

    மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவு இல்லையெனில் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியாது.

    தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றாமல், அதையும் தாண்டி பல திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் மிக நீளமான விரைவு வழிச் சாலைத் திட்டம் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கான பணிகள் அடுத்த ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அரசு சார்பில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்க சுமார் 40 லட்சம் மாணவர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ளனர்.

    தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai