Enable Javscript for better performance
ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் எண்ணிக்கையை உயர்த்த முடிவு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் எண்ணிக்கையை உயர்த்த முடிவு

    By dn  |   Published on : 28th January 2015 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரூ.300 விரைவு தரிசனம் இணையதள முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்த உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாசராஜு கூறியது:

    திருமலையில் ரதசப்தமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 92 ஆயிரம் பக்தர்கள் அன்றைய தினம் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மேலும், திருமலையில் நடைபெற்ற 7 வாகன சேவைகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இலவசமாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

    கடந்த சில நாள்களாக ரூ.300 விரைவு தரிசன பக்தர்களுக்காக இணையதளத்தில் அளிக்கப்பட்டு வந்த 18 ஆயிரம் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படுகிறது. இணையதள வசதியை தற்போது அனைவரும் பயன்படுத்திக் கொள்வதால் கூடுதலாக 2 ஆயிரம் டிக்கெட்டுகளை அளிக்க உள்ளனர்.

    இதன் மூலம், 20 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை சுமார் 2 மணி நேரத்துக்குள் எளிதாக தரிசிக்க முடியும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai