சுடச்சுட

  

  கோதாவரி புஷ்கரம்: 4 நாட்களில் 80 லட்சம் பக்தர்கள் நீராடினர்

  By dn  |   Published on : 18th July 2015 11:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bhadrachalam

  ஆந்திராவில் கடந்த 14-ம் தேதி கோதாவரி புஷ்கரம் விழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. முதல் நாளிலேயே ராஜ முந்திரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள். கோட்டக்குப்பம் பகுதியில் நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

  ஆந்திரத்தின் கும்பமேளா என்று கருதப்படும் கோதாவரி புஷ்கரம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 12 நாள்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கோதாவரி புஷ்கரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அத்துடன், இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் "மகா புஷ்கரம்' என்பதால், கோதாவரி ஆற்றில் புனித நீராடுவதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

  வருகிற 25–ம் தேதி நடைபெறும் இந்த விழாவில் 4 கோடி பக்தர்கள் கோதாவரியில் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஆந்திராவில் 60 லட்சம் பக்தர்களும், தெலங்கானாவில் 20 லட்சம் பக்தர்களும் புனித நீராடி உள்ளனர். இரவிலும் பக்தர்கள் ராஜமுந்தரி வந்து குவிகிறார்கள்.

  ஆற்றுக்குள் நடக்கும் ஆரத்தி நிகழ்ச்சியை கண்டு தரிசிக்கிறார்கள். விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இதனால் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் கோதாவரி ஆற்றில் படகுகளை கடிகார வளையம்போல் நிறுத்தி காவல் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

  இன்றும், நாளையும் பக்தர்கள் அதிகம் வர இருப்பதால் 2 நாட்களிலும் வி.ஐ.பி.க்கள் யாரும் கோதாவரி புஷ்கரத்துக்கு வரவேண்டாம் என ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  கோதாவரி புஷ்கரத்துக்கு வரும் பக்தர்களுக்காக ராஜமுந்திரியில் அன்னதான திட்டத்தை முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம் செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai