Enable Javscript for better performance
பன்றிக் காய்ச்சலைத் தடுக்க ஆண்டுதோறும் தடுப்பூசி: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை- Dinamani

சுடச்சுட

    

    பன்றிக் காய்ச்சலைத் தடுக்க ஆண்டுதோறும் தடுப்பூசி: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

    By dn  |   Published on : 07th March 2015 05:34 AM  |   அ+அ அ-   |    |  

    cure

    பருவகாலத் தொற்று நோயான பன்றிக் காய்ச்சல் வருவதைத் தடுக்க ஆண்டுதோறும் தடுப்பூசி போடுவதே நல்ல பயன் அளிக்கக் கூடிய தீர்வு என்று உலக சுகாகார நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து உலக சுகாகார நிறுவனம் கூறியுள்ளதாவது:

    குளிர் கால தொற்றுநோய்களான குளிர்க் காய்ச்சல், சுவாச நோய்கள் உலகம் முழுவதும் பரவக்கூடியவை.

    கடந்த 2009ஆம் ஆண்டு பேரழிவு ஏற்படுத்தும் தொற்று நோயாக பரவிய பன்றிக் காய்ச்சல் நோய் தற்போது உலகம் மழுவதும் மனிதர்களிடம் பரவலாக காணப்படும் நோயாக மாறியுள்ளது.

    சிறுவர்கள், மிகவும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் போன்றவர்களுக்கு சாதாரண உடல் நலக்குறைவு மற்றும் உயிரிழப்பு ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு அபாயம் விளைவிக்கக் கூடியது பன்றிக் காய்ச்சல் நோய்.

    எனவே சுவாசம் விடுவதில் சிரமம், குறுகிய சுவாசம், நெஞ்சு வலி, இருமலின்போது நிறம் மாறிவரும் சளி, தொடர் வாந்தி, நினைவுப் பிறழ்ச்சி, குழப்பமான மனநிலை போன்ற அவசரகால அறிகுறிகளுடன் வருவோர் மீது மருத்துவர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

    குளிர் காய்ச்சல் நோய் பரவல் குறித்த தொடர் கண்காணிப்பு, தொற்று நோய் பரவலை தடுக்க சுகாதாரத் துறையின் தயார் நிலை போன்றவை குறித்து உலக நாடுகளை உலக சுகாகார நிறுவனம் சார்பில் வலியுறுத்தி வருகிறோம்.

    குளிர் காய்ச்சல் நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் தடுப்பூசி போட பரிந்துறை செய்து வருகிறோம்.

    மக்களிடையே வழக்கத்திற்கு மாறாக உண்டாகும் உடல் நலக் குறைவு குறித்த விஷயங்களை அரசுகள் கண்காணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பருவகால குளிர்க் காய்ச்சல் நோய் கிருமிகள் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன, இதனால் தொடர்ந்து பலமுறை இந்த நோய்த் தொற்று மனிதர்களுக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

    மேலும், 2014-2015 ஆண்டில் உலகம் முழுவதும் அதிக அளவில், தீவிரமாக பருவகால குளிர்க் காய்ச்சல் நோய் பரவியது.

    இந்த நோய்க் கிருமியின் உடல்கூறில் மாற்றங்கள் நிகழ்ந்த காரணத்தால் எற்கெனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசி குறைந்த திறன் வாய்ந்ததாக மாறிப்போனது.

    எனவே, இதற்கான தடுப்பூசி மருந்து தயாரிக்கும் மூலப்பொருள்களில் ஆண்டிற்கு இருமுறை மாற்றம் செய்வதன் மூலம் திறன் வாய்ந்த தடுப்பூசியை தயாரிக்கச் செய்து இந்த கிருமிகள் பரவுவதை கட்டுக்குள் வைத்திருக்கிறோம்.

    உடல்கூறில் மாற்றம் நிகழ்ந்த ஏ வைரஸ் எனப்படும் ஹெச்3என்3 வைரஸ், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மனிதர்களை தாக்கி குளிர் காய்ச்சல் நோய் பாதிப்பை உண்டாக்கியது.

    ஆனால் இந்தியாவில் பாதிப்பை உண்டாக்கியது உடல்கூறில் மாற்றம் நிகழ்ந்திடாத ஹெச்1என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் ஆகும்.

    இதுவரை இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 1,239 பேர் பலியாகிவிட்டனர். 23,153பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

    இந்தியாவில் இந்த நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டது குஜராத் மாநிலம் ஆகும். இங்கு இதுவரை 300 பேருக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

    எனவே, பருவகால தொற்று நோயான பன்றிக் காய்ச்சல் வருவதை தடுக்க ஆண்டுதோறும் அவ்வப்போது மூலக்கூறில் மாற்றங்கள் செய்து தயாரிக்கப்படும் தடுப்பூசியைப் போடுவதே நல்ல பயன் அளிக்கக் கூடிய தீர்வாக இருக்க முடியும் என்று உலக சுகாகார நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp