சுடச்சுட

    

    சித்தராமையாவுக்கு பன்றிக்கறி பார்சல்: ஸ்ரீராம் சேனா அமைப்பு

    By DN  |   Published on : 05th November 2015 11:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sidharamaia

    மாட்டிறைச்சி குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பன்றிக்கறி பார்சல் அனுப்பு உள்ளனர் ஸ்ரீராம் சேனா அமைப்பினர்.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த வாரம் மாட்டிறைச்சி குறித்து கருத்து தெரிவித்த போது தனக்கு பிடித்து இருந்தால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன், அதை யாரும் தடுக்க முடியாது’ என்று கூறியிருந்தார்.

    அவருக்கு விஷ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவசேனா, பஜ்ரங்தளம் உள்ளிட்ட இந்துத்வா அமைப்பினர் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    மேலும் ஷிமோகா பாஜக செயலாளரும், மூத்த தலைவர்களில் ஒருவரான சென்ன பசப்பா, இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டை வெட்டி சாப்பிட்டால் சித்தராமையாவின் தலையை வெட்டி பந்தாடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதையடுத்து ஷிமோகா போலீஸார் சென்ன பசப்பா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதற்கிடையே கர்நாடக மாநிலம் பிஜப்பூரில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலித் கூறுகையில், மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என்று சொன்ன முதல்வர் சித்தராமையா இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், மாட்டிறைச்சி சாப்பிடும் சித்தராமையா பன்றி இறைச்சி சாப்பிடுவாரா? பன்றி இறைச்சி சாப்பிடுவேன் என்று வெளிப்படையாக அறிவிக்க தைரியம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், சித்தராமையாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவருக்கு பன்றிக்கறி பார்சல் அனுப்பும் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தார்.

    அதன்படி அவர் சித்தராமையாவுக்கு ஒரு கிலோ பன்றிக்கறி பார்சலை பிரமோத் முத்தலித் அனுப்பி வைத்தார். இது போல் மாநிலம் முழுவதும் இருந்து சித்தராமையாவுக்கு ஸ்ரீராம் சேனா அமைப்பினர் பன்றிக்கறி பார்சல் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதையடுத்து கர்நாடகத்தில் பதட்டம் நிலவி வருகின்றன. பிரமோத் முத்தலிக்கும், இந்து சேனா அமைப்பினரும் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பாகல் கோடு பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்த பிரமோத் முத்தலித்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததுடன் முத்தலிக் பாகல் கோட்டில் 1 மாதம் நுழைய தடை விதித்துள்ளது.  இதை மீறி பாகல் கோடு வந்த முத்தலிக்கை போலீஸார் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai