சுடச்சுட

  

  பயங்கரவாதத்துக்கு நிதி: ரூ.2.12 கோடி வங்கி இருப்பு முடக்கம்

  By  புது தில்லி  |   Published on : 20th November 2015 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ததற்காக, ரூ. 2.12 கோடிக்கு மேல் இருப்பு வைத்துள்ள 37 பேரின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதாக, சர்வதேச பயங்கரவாத நிதி எதிர்ப்பு அமைப்பான நிதி முறைகேடு தடுப்புப் பிரிவு (எஃப்.ஏ.டி.எஃப்) தெரிவித்துள்ளது.
   இதுகுறித்து அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரான்ஸ் உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, எஃப்.ஏ.டி.எஃப் அமைப்பின் பரிந்துரைகளின்படி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியளித்தல் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பது குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
   இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும், சட்டவிரோத நடைமுறைகளுக்கும் நிதியுதவி அளித்ததற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை 37 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகளில் மொத்தம் ரூ.2.12 கோடிக்கு கூடுதலான தொகை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai