ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானி (86), மூச்சுத்திணறல் காரணமாக தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலைக் குறித்து அறிவதற்காக பல்வேறு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.